Monday, July 20, 2009

ஊருக்கு போயிட்டு வந்தாச்சு......



எல்லோரும் நல்ல சுகம்.

முடிந்த வரை முக்கியமான வேலைகளை எல்லாம் முடித்தாயிற்று.

பல நண்பர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக அலைபேசியில் பேசமட்டும் தான் முடிந்தது.

சில பதிவர்களிடமும் அலைபேசியில் அளவளாவினேன்.

நாமக்கல் சிபி எழுத்தில் கலாய்ப்பு அதிகமிருந்தாலும் பேசும்போது குரலில் ஒரு கூச்சம் தெரிந்தது.நேரில் சந்தித்து நல்லா 'பழகினால்' கூச்சம் போய்விடும் என நினைத்து கொண்டேன்.

நண்பர் பாலபாரதி அதே ப(லே)ழைய பாசத்துடன் பேசினார்.கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்டவுடன் கடுப்பாகி பழையபதிவுகளை போய் பாரு என கூறிவிட்டார்.வலையுலகில் ஆயிரம் நாள் காணாமல் போனதில் பல நல்ல விஷயங்கள் நடந்தது தெரியாமல் போய்விட்டது.

துளசியம்மா குரலில் எழுத்தில் உள்ள குறும்பு அப்படியே இருந்தது. சென்னையில் எங்கே என கேட்டார்.நெல்லை என்றதும் எந்த ஊர் என விசாரித்து அறிந்து கொண்டார்.

எங்கள் திருநெல்வேலி பதிவர்களில் ,சிறந்த கவிஞரும், எழுத்தாளருமான திரு.கலாபிரியா அவர்களது குரல் மிகவும் மென்மையாக இருந்தது.அவரது பதிவுகளில் இயல்பான எழுத்தில் திருநெல்வேலி நகர தெருக்கள்,அந்தகால வாழ்க்கை முறை மற்றும் திரைப்படங்கள், திரையரங்குகள் பற்றி மிகவும் அருமையாக விவரித்திருப்பார்.அவர் வசிப்பது அம்பாசமுத்திரம் அருகேயுள்ள இடைகால் என நினைத்து நேரில் சென்று சந்திக்க எண்ணியிருந்தேன். ஆனால் அவர் இருப்பது தென்காசி கடையநல்லூர் அருகேயுள்ள இடைகால் என்பதால் அடுத்த விடுமுறையில் சந்திப்பதாக கூறினேன்.எங்கள் ஊருக்கு பல ஆண்டுகளுக்கு முன் வந்த நியாபகம் உள்ளதாக கூறினார். 90களில் சன் டிவி வரும் முன் சிற்றூர் திரையரங்குகளில் அமரர் எம்.ஜி.யார் நடித்த திரைப்படங்களே அனேக மக்கள் விருப்பமாக இருந்த்து எனவும்,நானும் சிறுவயதில் எம்.ஜி.யாரின் தீவிர ரசிகன் எனவும் கூறினேன்.அவரது பதிவுகளை படிக்கும் போது ஊரில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவதையும் , பணிக்காக குடும்பத்தை பிரிந்து வா(டு)ழும் என் போன்றோருக்காக அவரது அனுபவங்களை நிறைய பதிவுகளாக எழுத வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.

அடுத்த விடுமுறையிலாவது அனைத்து நண்பர்களையும் நேரில் சந்திக்க ஆண்டவன் அருள் புரியவேண்டும்

2 comments:

நாமக்கல் சிபி said...

//நேரில் சந்தித்து நல்லா 'பழகினால்' கூச்சம் போய்விடும் என நினைத்து கொண்டேன்.//

ஏன்யா இப்படியெல்லாம்!

Anonymous said...

//கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்டவுடன் கடுப்பாகி பழையபதிவுகளை போய் பாரு என கூறிவிட்டார்//

கல்யாணத்தை பற்றிக் கேட்டா எல்லாரும் கடுப்பாகத்தானே செய்வாங்க :))